பா.ம.க செயலாளர் கொலை வழக்கு... முக்கிய குற்றவாளிக்கு நீதிபதி விதித்த தடை

x
  • காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் தேவமணி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி மணிமாறன், காரைக்காலில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணியை கடந்த 2021ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே, கூலிப்படையினரை வைத்து வெட்டி கொன்ற வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தில் மணிமாறன் கைது செய்யப்பட்டார்.
  • அவரது ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், திருநள்ளாறு காவல்நிலையத்தில் வாரத்தில் 2 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது.
  • மணிமாறன் வருகையால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி ஆட்சியருக்கு ஆய்வாளர் அறிவுச்செல்வன் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
  • இதன்பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர, காரைக்காலில் மணிமாறன் நுழைய சார்பு கோட்ட நீதிபதி ஜான்சன் தடை விதித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்