60 நாளில் தீர்ந்த ஆசை! "கணவனை கொல்ல 'ஸ்லோ பாய்சன்' கொடுத்த மனைவி" - அதிர வைக்கும் Ex காதலனுடன் வாட்ஸ்அப் சாட்

x

திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்த தகாத உறவால் கணவனுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து மனைவியே கொலை செய்ய முயன்ற சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன். கொத்தனாராக பணிபுரிந்து வந்த இவருக்கும் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வந்த நிலையில் தீடீரென ஒரு நாள் இரவு வடிவேல் முருகன் நிணைவிழுந்து கீழே விழுந்தார். உடல்நலக்குறவி ஏற்பட்டு வடிவேல் முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வடிவேல் முருகன், மனைவியின் செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப்பை சோதனை செய்துள்ளார். அதில், அவரின் மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அச்செயலியின் செய்தியில் தனக்கு ஸ்லோ பாய்சன் வைத்திருப்பதாக மனைவி அந்நபரிடம் தெரிவித்ததை அறிந்து வடிவேல் முருகன் அதிர்ந்து போனார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகன் தன் மனைவி குறித்தும், இச்சம்பவம் குறித்தும் போலீசில் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்