யாருக்கும் தெரியாமல் வீட்டை விற்ற கணவர்.. வாங்கியவர்கள் கூறியும் வெளியேறாத மனைவி.. உள்ளே புகுந்து சிலிண்டரை திறந்துவிட்ட கொடூரம்
- கன்னியாகுமரியில் வீட்டை விற்ற நபர் தலைமறைவான நிலையில், வீட்டை வாங்கிய நபர் மனைவியுடன் வீட்டிற்குள் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குமரி மாவட்டம் மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவர் தனது வீட்டை மணிகண்டன் என்பவருக்கு விற்றுவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
- இந்தநிலையில் வீட்டை வாங்கிய மணிகண்டன் தனது மனைவியுடன் வந்து, சோமுவின் குடும்பத்தாரை வெளியேற கூறியுள்ளார்.
- சோமு குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனும் அவரது மனைவியும் வீட்டிற்குள் புகுந்து, கதவுகளை அடைத்துவிட்டு, சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர்.
- பின்னர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளனர்.
- தகவலறிந்த போலீசார் கதவுகளை உடைத்து மணிகண்டனையும் அவரது மனைவியையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story