மயக்க நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்த இன்ஜினியர்.. சுயநினைவை இழந்து பலி - ஒன்றும் அறியாதது போல் நலம் விசாரித்த கொடூரன்
- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர்.
- இதில், மகள்கள் இருவரும் திருமணமாகி சென்றதாலும், மகன் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவதாலும் தம்பதி தனியே வசித்து வந்துள்ளனர்.
- இந்நிலையில், இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான எட்வின், வீட்டின் தனியாக இருந்த கூலித் தொழிலாளியின் மனைவியிடம் பல முறை சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது.
- இதனால், ஆத்திரமடைந்த பெண் இது குறித்து இளைஞரின் பெற்றோரிடம் சொன்னதோடு இளைஞரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத எட்வின், தொடர்ந்து அவரை நோட்டமிட்டே வந்துள்ளார்.
- இந்நிலையில், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பெண், களைப்பாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த எட்வின், வீட்டினுள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.
- இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, பயந்து போன எட்வின், அவரை சரமாரியாக தாக்கி கழுத்தில் மிதித்ததில் நிலை குலைந்த பெண் மயக்கமடைந்திருக்கிறார். இதையடுத்து, மயக்கநிலையில் வைத்தே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் சுயநினைவற்ற நிலையில் கிடந்த பெண்ணை அப்படியே போட்டு விட்டு தப்பியோடியிருக்கிறார்.
- இதன்பின்னர், பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒன்றும் அறியாதது போல் இளைஞனும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனை சென்றதும், காவல்நிலையம் உடன் சென்று புகாரளித்து நாடகமாடியது தான் கொடூரம்.
- இதில், பாதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்ற நிலையில், பல மருத்துவமனைகளில் அனுமதித்து காப்பாற்ற போராடியுள்ளனர் உறவினர்கள். இதனிடையே, பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஒரு கட்டத்தில் எட்வினிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, எட்வினை போலீசார் கைது செய்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story