புதிய போன் வாங்கும் இளைஞர்களே உஷார்..! ஆதாரை வாங்கி செல்போன் கடைக்காரர் செய்த பகீர் செயல்
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், செல்போன் வாங்குவதற்காக கொடுத்த ஆதார் உள்ளிட்ட சான்றுகளை வைத்து, 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
- தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அருள் பிகாத் என்பவரிடம், கேசவன் புதூர், எட்டாமடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போன் வாங்கச் சென்றுள்ளனர்.
- அப்போது, செல்போன் வாங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆதார், ஏடிஎம் கார்டு தகவல்களை வைத்து, அருள் பிகாத் ஏராளமான பொருட்களை தவணை முறையில் வாங்கியதாக கூறப்படுகிறது.
- இதுதொடர்பாக செல்போன் எண்ணிற்கு தவணை தொகை கட்டுமாறு குறுஞ்செய்தி வந்ததாகவும், இந்த மோசடியில் ஈடுபட்டது அருள் பிகாத் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது.
- பலரிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
Next Story