தமிழகத்தை உலுக்கிய கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு - சிபிஐ- க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுகளுக்கு சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கடந்த 2004ஆம் ஆண்டில் கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகள் 10 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள்தண்டனையை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து, கந்தவேலு, ஜோதி, மணி, தனவேல், அஞ்சாப்புலி, ஆகிய ஐந்து பேர் தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, பி.எஸ். நரசிம்மா அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Next Story