பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து சீறிப்பாயும் உபரி நீர்... - ஆபத்தை உணராமல் இளைஞர்கள் அட்டூழியம்

x

வெளியேறும் உபரி நீரில் மீன்பிடிக்கும் வாலிபர்கள் மத்தியில் பட்ட கத்தியுடன் ஒரு வாலிபர் சுற்றி திரிவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த கனமழையால் ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து பிள்ளைப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி தற்போது கலங்கள் வழியாக உபரி நீர் சீறி பாய்ந்து கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஏரியின் இப்பகுதி ஆழமானதாகும்.

எனவே பொதுமக்கள் இப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு மற்றும் புகைப்படம் (செல்பி) எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும்,

சீறி பாய்ந்து செல்லும் உபரிநீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக குளித்தும்,விளையாடியும் வருகின்றனர்.

மேலும் வாலிபர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதில் ஒரு வாலிபர் மூன்று அடி நீளமுள்ள பட்டா கத்தியுடன் உபரிநீரில் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே நீர்வளத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து பிள்ளைப்பாக்கம் ஏரியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்