கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி - நேரில் சென்று பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
- திமுக எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் அரவிந்தன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
- அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை அடுத்து, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
Next Story