காஞ்சிப் பட்டில் காமாட்சி அம்மன்.. தத்ரூபமாக வடிவமைத்த தம்பதி
- காஞ்சி பட்டு சேலையில் காமாட்சி அம்மன் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாமமும், காமாட்சி அம்மனின் உருவமும் தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளன...
- பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சியில் வசிப்பவர்கள் நெசவுத் தொழில் செய்யும் குமரவேலு- கலையரசி தம்பதி...
- காஞ்சி அம்மனின் தீவிர பக்தரான மலேசியாவை சேர்ந்த நாராயணமுர்த்தி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இத்தம்பதி லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் ஆயிரம் சுலோகங்களையும், அம்மனையும் 1கிலோ 300கிராம் எடையுள்ள 18 முழம் பட்டு சேலையில் தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளனர்...
- இதன்மூலம் தனது 12 கால கனவு நனவானதாகியுள்ளதாகவும், இந்த சேலையை மலேசியாவில் உள்ள நாராயணி மகா மாரியம்மன் கோயிலிலும் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் திருமீய்ச்சூர் லலிதாம்பிகை அம்மனுக்கும் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
Next Story