பைக்கில் TTF வாசகம்.. கஞ்சா போதையில் சம்பவம் - போலீஸ் விரட்டியதால் கையில் மாவுக்கட்டு
காஞ்சிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்த போது 3 சிறுவர்கள் மற்றும் தினேஷ் குமார் என்ற இளைஞர் என 4 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன்பேரில் அவர்களை போலீசார் விரட்டிச் சென்ற போது தினேஷ்குமார் தவறி விழுந்ததில் அவரின் கை முறிந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கும், தினேஷ் குமாரை சிறைக்கும் அனுப்பினர். இதில் தினேஷ் குமாரின் இருசக்கர வாகனத்தில் டிடிஎப் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசனின் ஆதரவாளர் இவர் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
Next Story