பணம் கொடுக்க டைம் கேட்டவர்களை கடத்தி கொண்டு போய் கும்மியெடுத்த கும்பல் - எம்எல்ஏவுடன் சேர்த்து 7 பேருக்கு செக்
- வளசரவாக்கத்தில் வாங்கிய பணத்தை கொடுக்க அவகாசம் கேட்டவர்களை கடத்தி சென்று மிரட்டிய, எம்எல்ஏவின் உறவினர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் முகமது ஈசாக் மற்றும் முன்வர் உசைன் ஆகியோர், குறும்படம் எடுப்பதற்காக 80 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
- பின்னர் 30 லட்சத்தை திருப்பி அளித்த அவர்கள், மீதமுள்ள பணத்தை தருவதாக அவகாசம் கேட்டுள்ளனர்.
- இந்தநிலையில் நேற்று இருவரையும் செல்வம் தரப்பினர், காஞ்சிபுரத்திற்கு கடத்தி சென்று தாக்கி, மீதி பணத்தை கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வளசரவாக்கம் போலீசார், செல்வம் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
- இதில் செல்வம், எம்எல்ஏவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன் மூர்த்தியின் உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story