"காஞ்சிபுரத்தில் அதிக குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்" - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் கடந்த 6-ஆம் தேதி தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவர்களைத் தேடி பிடித்து மீட்டனர். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், டாக்டர் ஆனந்த், அந்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை தொழிலாளர் முறை என்பது ஒரு கடுமையான குற்றம் என்றும், அது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வரும் காலங்களில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து குழந்தைகள் தப்பிச்செல்லாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.