காஞ்சிபுரத்தில் களைகட்டிய போதை மாத்திரை விற்பனை - சிக்கிய வடமாநில தம்பதி
காஞ்ச ிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய கீவளூர் பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த அசாருல் இஸ்லாம், அவரது மனைவி நசீமாமேகம் ஆகிய இருவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அ
தன் அடிப்படையில், தம்பதி இருவரும் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றைக் கைப்பற்றிய போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story