சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து...மீண்டும் கைதான கனல் கண்ணன்...

x

காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பாஜக பிரமுகர் கனல் கண்ணனுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு தான் இவை..கலையில் ஆஜரானவரை மாலை வரை காக்க வைத்து இறுதியில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள் . கனல் கண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதிரடியான சண்டை காட்சிகள் தான் ஒரு சில படங்களில் கேமியோவாக வந்து சென்றாலும் கோடம்பாக்கத்தில் கொடி கட்டி பறந்தவர். சில வருடங்களுக்கு முன்பு கமலாலயத்தில் காலடி எடுத்து வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு, சண்டைக்கு பதில் சர்ச்சை என்பதே அவரது அடையாளமாக மாறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மதம் சார்ந்த அவரது பேச்சுக்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்றவேண்டுமென மேடையில் தீ குழம்பாக கொதித்திழுந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சை பாஜகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி ஃபயர் விட்டதால் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படு விடுதலையானார்... இந்த நிலையில் தான் தற்போது கிருஸ்துவ மதத்தினரை புண்படுத்தும் நோக்கத்தோடு, ஒரு காணொளியை வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில் மீண்டும் கைதாகி இருக்கிறார் மாஸ்டர். கிருஸ்துவ பாதிரியார் ஒருவர் இளம் பெண்ணோடு நடனமாடும் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட கனல் கண்ணன், கிருஸ்தவர்கள் அனைவரும் இந்துக்களாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதோடு கிருஸ்த்துவம் குறித்து சில சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். ஆனால் அது வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்பதை மறைத்து, பின்னணியில் ஒரு ஏஆர் ரகுமான் பாடலை ஒலிக்கவிட்டிருந்ததது உள் நோக்கம் கொண்டது என கூறப்பட்டது. அந்த வீடியோவும், கனல் கண்ணன் பதிவிட்ட கருத்தும் கிருஸ்துவர்களை புண்படுத்திவிட்டதாக திமுகவைச் சேர்ந்த பெனட் என்பவர், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். சம்பவம் நடந்த அன்று காலை அந்த வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் சைபர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார் கனல் கண்ணன். அப்போது அவருக்கு ஆதரவாக பாஜகவினரும் குவிந்திருந்தனர். காலை முதல் கனல் கண்ணனை வெயிட்டிங்கில் வைத்திருந்த அதிகாரிகள் அவரை விசாரனைக்கு எடுக்காமல் அலைகழிப்பதாக குற்றம் சாட்டி போரட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கனல் கண்ணனை பார்க்க வந்த மூத்த நிர்வாகிகளிடம், அமைச்சர் மனோ தங்கராஜ் தான் தனக்கு எதிராக சதி செய்வதாக கூறி குமுறிக் கொண்டிருந்தார். அதோடு அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து அவதூராக ட்விட் செய்ததை பெருமையாக தனது சகாகளிடம் பேசிக் கொண்டிருந்தவர், அதிகபட்சம் 10 நாள் சிறையில் வைப்பார்கள் அவ்வளவு தானே என காவல் நிலையத்தில் நின்று கொன்டே மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த கனல் கண்ணனை பாஜகவினர் வெளியே அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கும், கட்சிகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஆகி இருக்கிறது..ஒரு வழியாக கனல் கண்ணனை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்ற போலீசார் நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்