நேரில் ஆஜரான கனல் கண்ணன்.. அப்படியே லாக் செய்த போலீஸ்.. பரபரப்பான நாகர்கோவில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக பதிவிட்டதாக, கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் கனல் கண்ணன் விசாரணைக்காக ஆஜரானார். அங்கு வந்த இந்து முன்னணியினர், அவரை நீண்ட நேரமாக காக்க வைத்திப்பதாக கூறி, உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை அலுவலகத்திற்கு வெளியே இந்து முன்னணியினர் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி, கனல் கண்ணனை மட்டும் மீண்டும் அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தகராறு ஏற்பட்டு, பின்னர், கனல் கண்ணன் மீண்டும் அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.