கள்ளக்குறிச்சி கலவர வழக்கு.. 2 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிபதி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் உள்ள 2 பேரின் நீதிமன்ற காவலை 15 நாட்கள் நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், கடந்த 28ஆம் தேதி 2பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ள நிலையில், சஞ்சிவ், பாலாஜி 2 பேரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வரும் 25 ஆம் தேதி வரை 2 பேரின் நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்