கொத்து கொத்தாக 60 உயிர்கள்..மரணஓலம் கேட்டும் அடங்கா கோரம்..வாரிசுகளை நினைத்து நடுங்கும் மக்கள்
- கல்வராயன் மலையில் மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் போலீசாரால் அழிக்கப்பட்ட நிலையில்...அதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு... கொத்துக்கொத்தாய் செத்து விழுந்த மனிதர்களையும், அழுது புறண்ட அவர்களது உறவுகளின் அபயக்குரலையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது... கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கு மேற்பட்டோர் எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 60க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த மாதேஷ் உட்பட 20க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநிலம் முழுதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஏராளமான கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கல்வராயன் மலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் மூன்று மாத இடைவெளியில் மீண்டும் கல்வராயன் மலையில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. கள்ளச்சாராயத்திற்குத் தனது ஊரைச் சேர்ந்த ஆறு பேர் பலியான நிலையில் மீண்டும் கள்ளச்சாராய ஊரல் அழிக்கப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார் மாதவச்சேரியை சேர்ந்த பழனிசாமி .இந்த சம்பவம் மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதியிடம் கேட்ட்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் குண்டர் சட்டத்தின் கைது செய்து வருவதாகத் தெரிவித்தார். கிராம நிர்வாக அதிகாரிகள் முதல் வருவாய்த் துறை அதிகாரிகள் வரை கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க உத்தரவிட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.
Next Story