"கள்ளக்குறிச்சி சம்பவம்" | எல்லா ஆதாரமும் இருக்கு.. | "டிஜிபி அலுவலகத்தில் பெற்றோர் பரபரப்பு புகார்
கள்ளக்குறிச்சி கலவர விவகாரத்தில் பொய் வழக்குகளை போட்டு தங்கள் மகன்களை போலீசார் கைது செய்துள்ளதாக பெற்றோர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கனியாமூர் பள்ளிக்கூடத்தை சூறையாடிய வழக்கில் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கலவரத்திற்கு சம்பந்தமே இல்லாத மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆதாரங்களுடன், சென்னை வந்து, டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Next Story