உதவியாளரை காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி ஆட்சியர் - இணையத்தில் பரவி வரும் வீடியோவால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், தனது காலணிகளை உதவியாளரை அழைத்து எடுக்க சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை மாத திருவிழா வரும் ஏப்ரல் 18ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது, கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, தனது காலணிகளை உதவியாளரை அழைத்து எடுக்க சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி அனைவரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Next Story