காண்போருக்கு நெகிழ்ச்சி..மொத்த குடும்பத்தோடு 100வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி
கள்ளக்குறிச்சியில் மூதாட்டி ஒருவரது நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் ஒன்று கூடி, வெகு விமர்சையாக கொண்டாடிய நிகழ்வு காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சாங்கியம் கிராமத்தில் வசிக்கும் சுலோச்சனா என்ற மூதாட்டிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவர் சொந்த ஊரில் தனது குடும்ப உறவுகள் சூழல்...
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சுலோச்சனாவின் நூறாவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கேக் வெட்டி அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.
பாட்டியின் காலில் விழுந்து பேரக்குழந்தைகள் ஒவ்வொருவரும் ஆசி பெற்ற காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
சுலோச்சனாவின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, ஊர் பொதுமக்கள் பலரும் அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர்.
Next Story