#JUSTIN | கடிக்க பாய்ந்த நாய்.. சாலையில் சறுக்கிய பைக்.. பதறி போய் பஸ்ஸை மரத்தில் மோதிய டிரைவர்..

x

மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து இன்று காலை மயிலாடுதுறைக்கு 1சி என்ற அரசு பேருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு மணல்மேடு, பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து நடராஜபுரத்தை அடுத்த மல்லியக்கொல்லை என்ற இடத்தில் பேருந்து செல்லும் போது பேருந்தின் எதிரில் சாலையில் வேகமாக

இருசக்கர வாகனத்தில் ஒருவர் பட்டவர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்தார. சாலையின் குறுக்கே நாய் சென்றதால் நாயின் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் வாகன ஓட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருசக்கர வாகன ஓட்டியின் மீது அரசு பேருந்து மோதி விடாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை சாதுரியமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள், பயணிகள் உள்ளிட்ட 10 பேர் லேசான காயமடைந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்தில் சக்கரத்தில் மாட்டாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது பேருந்து புளிய மரத்தின் மீது மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்