"பத்து நிமிஷம்தான்.. எப்படி உயிர் போச்சு?" மருத்துவமனையில் கொந்தளித்த உறவினர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாவாடை தோப்பு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக, இக்பால் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாணியம்பாடி போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையேற்க மறுத்த உறவினர்கள், மருத்துவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார், சடலத்தை ஒப்படைத்தனர்.
Next Story