ஜூன் 8, NATIONAL BEST FRIENDS DAY... உயிர் நண்பர்கள் தினம் கொண்டாடுவது எப்படி?

x

வியக்க வைக்கும் தேசிய உயிர் நண்பர்கள் தினம்...

எடுத்துக்கோ.. இந்த உயிர் உனக்கு தானு சூர்யா ஆவேசமா வசனம் பேசும் போது, நம்ம எல்லாருக்கும் முதல்ல நியாபகம் வர்றது நம்மளோட தேவா'வ தான்.

எல்லாரையும் மாதிரி சும்மா ஹாய், பாய்'யோட முடிச்சிக்குற சாதாரண ஃப்ரண்ட்ஸ்சிப் கிடையாதுங்க... கேவலமா திட்டி, அடிச்சு துரத்தினாலும் கரப்பான்பூச்சி மாதிரி நம்மளைவிட்டுபோகாம... திரும்ப வந்து உசுற வாங்குற அந்த ஒரு பெஸ்ட் ஃப்ரண்ட்-அ மட்டும் தான் உங்களால இந்த சீன்னோட CONNECT பண்ணிக்க முடியும்..

இன்னைக்கு பேஸ்புக் ட்வீட்டர்'ல முன்னபின்ன தெரியாத ஒருத்தர் கூட "UR CELEBRATING FRIENDSHIP ANNIVERSARY"நு மாசத்துக்கு அஞ்சி, ஆறு NOTIFICATION வர ஆரம்பிச்சிருச்சி, ஆனா என்னைக்காவது ஒருநாள் நம்மளோட பெஸ்ட் பிரண்ட் கூட நம்ம ஏன் FRIENDSHIP ANNIVERSARY CELEBRATE பண்ணலனு ஃபீல் பண்ணி இருக்கோமா ? உங்க Best Friend-அ ரொம்ப மிஸ் பண்றீங்களா ? இன்னைக்கு அந்த கவலையே வேண்டாம்…. ஏன்னா, இப்போ அடடே- ல நாம கொண்டாட போறதே NATIONAL BEST FRIENDS DAY-அ தான்….

வணக்கம்… நண்பா, நண்பி, தோழா, மச்சி & Bro, எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, வர்ற ஜூன் 8-ம் தேதி, தேசிய உயிர் நண்பர்கள் தினம்... sooo, உலகத்துல நட்புக்கு இலக்கணமா நம்ம சரத்குமார், விஜய்குமார் மாதிரி ஒண்ணுமண்னா வாழ்றவங்கள பற்றி தான் நாம இன்னைக்கு முக்கியமா பார்க்க போறோம் but அதுக்கு முன்னாடி, இந்த National best friends day யார் உருவாக்குனதுனு ? எதுக்காக உருவானதுனு ஒரு குட்டி ஸ்டோரியோட ஆரமிக்கலாம் வாங்க...

அமெரிக்காவுல இருந்த காங்கிரஸ் கவர்மென்ட் வர்ஷாவர்ஷம் ஏதாச்சும் ஒரு தேசிய தினத்தை, புதுசா அறிமுகம் செஞ்சி, அடடே-னு அசத்துறத வழக்கமா வச்சிருந்தாங்க….

அந்த வகையில 1935- வது வர்ஷம், பஞ்சதந்திரம் படத்துல வர்ற ராம்-ஓட பிரேண்ட்ஸ் மாதிரி ஒரு நாள் உங்க, ஆபிஸ், குடும்பம், குட்டி எல்லாத்தையும் விட்டுட்டு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஜாலியா ஒரு ட்ரீப் போறதுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த நேஷனல் பெஸ்ட் பிரெண்ட்ஸ் டே… சோ…. இந்த வர்ஷம் ஜூன்- 8 ம் தேதிய கொண்டாடுறதுக்கு, மாட்டுனான்டா பம்பரக்க மண்டையன்னு ஒரு ஜாலி ட்ரீப் போறதுக்கான பிளான்ன இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க நண்பர்களே…

ஸ்கூல் காலேஜ்ல நமக்கு எக்கச்சக்க பிரெண்ட்ஸ் இருந்தாலும், அதுல உயிர் நண்பர்கள் யார் ? யார்னு ? கேட்டா ஒருத்தரையோ இல்ல , ரெண்டுபேரையோ தான் சொல்லுவோம் ஆனா, அமெரிக்காவுல இது உண்மையானு தெரிஞ்சிக்கிறதுகாக ஒரு ஆய்வையே நடத்திருக்காங்க...

அதுல அமெரிக்காவுல இருக்கிற 75 சதவீத மக்களுக்கு ஒருத்தர் ரெண்டு பேரைலாம்விட ஒரு கூட்டத்தையே பெஸ்ட் ஃப்ரெண்டா வச்சுக்கதான் பிடிக்கும்ங்கிற உண்மை தெரியவந்திருக்கு...

அப்போ மச்சான் birthday ட்ரீட்டான்னு கேட்டாங்கனு வச்சுகோங்களேன், அந்த birthday boy- யோட நிலைமைய நினைச்சாதான் பாவமா இருக்கு...

இது மட்டுமில்ல இன்னோரு ஆய்வு என்ன சொல்லுதுனா… ஒரு மனுஷன் மற்ற மனுஷங்கள தான் பெஸ்ட் பிரெண்ட்ஸ வைச்சிக்கணும் அவசியம் இல்லங்க, ஏன்னா, நிறைய பேருக்கு அவங்களோட செல்லபிராணியான நாய் தான் BEST & LOVABLE பிரெண்ட்டா இருக்குதுனும் தெரியவந்திருக்கு….

நமக்கு என்னதான் INKY, PINKY PONKY மாதிரி நிறைய பிரெண்ட்ஸ் இருந்தாலும், ஸ்கூல்ல "என் rough note-அ கிழிச்சுட்டான் மிஸ்-னு" காட்டிக்கொடுத்த அந்த ஒரு பிளக்ஷிப் தான் நிறைய பேரோட லைஃப்-ல காலம் கடந்த நண்பர்களாவும் இருந்திருக்காங்க… காதல் மட்டுமில்லங்க நட்புக்கூட மோதல்ல தான் ஆரம்பிக்கும் போல இருக்கு….

அந்த வகையில் ஸ்கூல்ல தான் நிறைய பேருக்கு உயிர் நண்பர்கள் கிடைச்சதாவும் ஒரு ஆராய்ச்சி சொல்லுது…. ண்பன் படத்துல அடிப்பட்டு கோமால இருந்த ஜீவா நண்வர்களோட முயற்சியில உடம்பு சரியாகி வர்ற சீன பார்த்துட்டு kerchief நனஞ்சிபோற அளவுக்கு நாமெல்லாம் கண் கலங்கியிருப்போம்...

உண்மையிலேயே உடல்ல நோய் பாதிப்பு இருக்கவங்க தங்களோட உயிர்நண்பர்கள் கூட இருந்தாங்கன்னா நோய்கள்ள இருந்து சீக்கிரம் குணமாகிடுவாங்களாம்... ஏன்னா நமக்கிருக்க பெரிய நோயே நம்ம ஃப்ரெண்டுதானா... ஹீ..ஹீ... "என் ஃப்ரெண்டபோல யாரு மச்சான்..." (பாடவும்)

ஆபத்துல உதவுறவந்தான் நண்பன்னு பக்கம் பக்கமா சினிமா டயலாக்லாம் பேசுவாங்க... ஆனா, மச்சான் கூகுல்பேல நூறு ரூபா அனுப்புடானானு சொன்னா போதும்... உடனே phoneஅ ஸ்விச்சிடாப் பண்ணிட்டு எஸ்கேப் ஆகுற கஞ்சத்தனமான ஒருசில பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸையும் நாம கடந்து வந்துருப்போம்... உண்மையிலயே ஆராய்ச்சி என்ன சொல்லுதுனா நமக்கு ஆபத்து வரும்போதும் சரி... நம்மளுடைய நண்பர்களுக்கு ஆபத்து வரும்போதும் சரி... நம்மளுடைய மூளை ஒரே மாதிரிதான் யோசிச்சு செயல்படுமாம்...

பெஸ்ட் ஃப்ரெண்ட் கூட பயங்கரமா சண்டைபோட்டு காவெல்லாம் விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவங்கமேல பாசமும் அக்கரையும் அதிகமா பொங்கிட்டு வரும்... அப்புறம் என்ன... சமாதானம் ஆகி.. சரி, கழுத பொழச்சிபோவுடும்னு பழம்விட்டு மறுபடியும் ஒன்னு சேர்ந்துருவோம்... இப்படி எலியும் பூனையுமா எந்த நண்பர்கள் அடிக்கடி சண்டைபோட்டுகுறாங்களோ அவங்களோட நட்பு தான் நீண்ட நாட்கள் நிலைச்சியிருக்குமாம்... அதுக்குனு உடனே... அன்னைக்கு நீ என்ன அப்டி திட்னேலனு உங்க ஃப்ரெண்டுகிட்ட சண்ட போட வருஞ்சிகட்டிகிட்டு கிளம்பிடாதீங்க... Its just a information brooo...

நட்பா இருந்தாலும் காதலா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துபோனா தான் அந்த உறவு ரொம்ப நாள் நீடிக்கும்னு முன்னோர்கள் சொல்லுவாங்க... இது ஆறறிவு இருக்கிற மனிதர்களுக்கு மட்டும் இல்லைங்க... நாலு கால்ல நடக்ககூடிய மிருகங்களும் இந்த தியரிய பாலோ பண்ணுதுங்க...

விளையாட்டுல பெரும்பாலும் ஆண் நாய்குட்டிகள் பெண் நாய்குட்டிகள் கிட்ட வேணும்முன்னே தோத்து போகுமாம்... உடல் அளவுல பலசாலியா இருந்தாலும் தோழிய ஜெயிக்க வச்சு சந்தோஷபடுறதுல மனுஷங்களையே மிஞ்சிடுதுங்க ஆண் நாய்குட்டிங்க...

காலேஜ் ஸ்கூல்லலாம் நம்ப ஃப்ரெண்டு எதாச்சும் தப்பு பண்ணி மிஸ்கிட்ட மாட்டிக்கிட்டானு வச்சிகோங்களேன்... போறவன் தனியா போய் திட்டுவாங்காம கூட நம்மளையும் கோர்த்துவிட்டுறுவான்... கடைசியில ரெண்டு பேருக்குமே டீச்சர் பனிஷ்மென்ட் கொடுத்துடுவாங்க... ஆனா ஒரு உண்மையான உயிர் நண்பன் எப்படி இருப்பான்னு, இதோ இந்த நீர்நாய்களை பாத்து கத்துக்கனும்.!

அதாவது, தண்ணில நீர்நாய்கள் தூங்கும் போது, பக்கத்துல இருக்கிற நண்பன் மூழ்கிட கூடாதுனு, கைய புடிச்சிகிட்டே தூங்குமாம்... அட... இதுவள்ளவோ நட்பு!

ஜாதி மதம் மொழியை இனத்தை கடந்ததுதான் நட்புனு பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருப்பீங்க... பெரியவங்க எத நினச்சி சொன்னாங்களோ தெரியல இங்க ஒரு நாயும் யானையும் தளபதி படத்துல வர ரஜினி மம்மூட்டி மாதிரி இணைபிரியா நண்பர்களாக இருக்காங்கப்பா... யானைய வேட்டையாடுற கும்பல் ஒன்னு south carolinaல கட்டுக்குள்ள குடும்பமா இருந்தா யானைக்கூட்டத்தை வேட்டையாடிருக்காங்க... அதுல bubbleங்குற ஒரு யானை மட்டும் உயிரோட மிஞ்சினதுனால வனவிலங்கு ஆர்வலர்கள் bubbleஅ மட்டும் காப்பாத்தி கொண்டுவந்து சரணாலயத்துல விட்டுடாங்க. நம்ம bubbleக்கு ஸ்விம்மிங்பூல் கட்ட கான்டிராக்டர் ஒருத்தர் bellaங்குற தன்னோட நாயோட சரணாலயத்துக்கு வந்துருக்காரு... ஆரம்பத்துல சாதாரண ஆளா அறிமுகமானவங்கதான்... ஸ்விம்மிங்பூல கட்டிமுடிக்கிற கேப்ல நம்ம bubbleஉம் bellaவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாவே மாறிட்டாங்கப்பா..

சிங்கம் புலி கரடிலாம் நண்பர்களா இருக்கறத lion king படத்துலையும் ஹாலிவுட் சினிமாவுலையும் மட்டும்தான் நாம பார்த்திருப்போம்... நாங்க பார்க்க காட்டுமிராண்டிதனமா இருந்தாலும் ஃப்ரெண்டிஷிப்னு வந்துட்டா நாங்கெல்லாம் பல்லுமுளைக்காத குழந்தைகளா மாறிடுவோம்னு இதுங்க மூனும் காட்டியிருக்கு.... எது எப்படியோ... சாப்பாட்டுக்கு சண்டைபோட்டுகாம ஒத்துமையா இருந்தா சந்தோஷம்தான்...

சிங்கம் புலி கூட ஏதோ மனசு மாறி மத்த விலங்குகளோட நண்பர்களா இருக்குங்க. ஆனா, எதிரிகளுக்கு எக்சாம்பிலா சொல்ற எலியும் பூனையும் எப்படிபட்டவங்கன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல... ஆனா அதெல்லாம் பொய்யுனு நிரூபிச்சிட்டாங்க இங்க இருக்க ஒரு பூனையும் இரண்டு எலிகளும்... Maggieங்குற முதலாளியம்மா ரோட்டுல பாவமா கிடந்த ரெண்டு எலிக்குட்டிகளை காப்பாத்தி வீட்டுக்கு கொண்டு வந்திருக்காங்க... ஆனா அவங்களுக்கு ஒரே பயம்... வீட்டுல அவங்க ஏற்கனவெ வளக்குற Ranjங்குற பூனை ரெண்டு எலிகளையும் கடிச்சு காலை டிப்பன்ன சாப்பிட்டுறபோதுனு...

ஆரம்பத்துல தூரத்துல இருந்தே மொரச்சிபாத்துகிட்ட இதுங்க நாளடைவுல திக் ஃப்ரெண்ட்ஸாவே மாறிட்டாங்க... கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையானு நினச்ச பூனையை பாசத்தாலையே கட்டிபோட்டிருக்கு இந்த எலிகள்...

விலங்குகள் தன்னோட உயிர் நண்பர்கள்கிட்ட ஆசாபாசத்தோட எப்படியெல்லாம் பாசமழைய பொழியிதுங்கனு இவ்வளவு நேரம் நாம பார்த்தோம்... அடுத்து வினோதமான உயிர் நண்பர்கள் செஞ்ச சாகசத்த தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும் நடிகையுமான Selena Gomez உலக அளவுல பிரபலமானவங்க. சமீபத்தில் அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு ஷாக்கிங்கான தகவலை போஸ்ட் பண்ணிருக்காங்க... அதாவது lupusங்குற நோய்னால அவங்களுடைய கிட்னி பாதிக்கப்பட்டிருக்கு... பிரச்சனை பெருசாக Selena Gomez ச பரிசோதித்த டாக்டர் உங்களோட ஒருபக்க கிட்னி சட்னிஆயிருச்சு.. அதுனால வேற கிட்னிதான் வெக்கனும்னு ஒரேபோடா போட்டுட்டு போயிட்டாரு... அந்த சமயத்துலதான் Selena Gomez ஓட உயிர்தோழி Francia Raisa தன்னோட ஒரு கிட்னியை கொடுத்து அவங்க நட்பையே பெருமைபடுத்தியிருக்காங்க... லிப்ஸ்டிக் கடன் கேட்டாலே கொடுக்கயோசிக்குற இந்த காலத்து பெண்களுக்கு மத்தியில Francia Raisaபோன்ற உண்மையான தோழிகளும் இருக்கத்தான் செய்றாங்க...

2015ல அமெரிக்காவைச் சேர்ந்த Amanda neremமும் அவருடைய நண்பர் Alec Noremமும் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது எதையாச்சும் வித்தியாசமா பண்ணி over நைட்ல world recordபண்ணனும்னு முடிவு பன்னிருக்காங்க... ரூம்போட்டு யோசிச்ச இவங்க ரெண்டுபேருக்கும் ஒரு வித்தியாசமான் ஐடியா கிடைச்சிருக்கு... அதாவது 31மணி நேரம் தொடர்ந்து கட்டிபிடிச்சு உலகத்துலையே அதிக நேரம் கட்டிபிடிச்ச நண்பர்கள்ன்னு guiness world recod பண்ணிருக்காங்கப்பா...

நம்ம ஊர்ல உயிர கொடுக்குற நண்பர்களை விட உயிர எடுக்குற நண்பர்கள்தான் அதிகம்... ஆனா அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழு வயசான rebecca, அவங்களோட தோழிய ஒரு விபத்துல இருந்து காப்பாத்த தன்னுடைய உயிரை தியாகம் செய்திருக்காங்க... பெஸ்டினு சொல்லிட்டு டார்ச்சர் பன்றவங்க மத்தியில rebecca the bestநு தன்னோட உயிரை கொடுத்து கெத்துகாட்டிடாங்கப்பா..

"என் பிரண்ட போல யாரு மச்சான்"

பாதி வெற்றி நம்ம கையில மீதி வெற்றி நண்பர்களுடைய கையிலனு சினிமா வசனமெல்லாம் பேசுறதுக்கு நல்லாதங்க இருக்கு... ஆனா பப்ஜி விளையாடும்போது revile பண்ணுடா மச்சானு சொன்னா ஒருத்தனும் வரமாட்டான்... friendshipகுள்ள இருக்க இத்தனை complicationsசையும் தாண்டி society ல வெற்றிபெற்ற ஒருசில பெஸ்ட் ஃப்ரெண்டஸை பத்திதான் இப்போ நாம பார்க்கபோறோம்..

உலக அளவுல ஓஹோனு இருக்கிற ஒரு கம்பெணி FLIPCART. இந்த கம்பெணிய உருவாக்குனது வேறுயாருமில்ல... Sachin Bansal மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் Binny Bansal. பள்ளிப் பருவ நண்பர்களான இவங்க பெங்களூர்ல சாதாரண பத்துக்கு பத்துக்கு ரூம்லதான் முதன்முதலா பிஸ்னஸை தொடங்கியிருக்காங்க... நண்பர்களோட விடா முயற்சிதான் இன்னைக்கு இவங்க ரெண்டுபேரையும் பெரிய பிஸ்னஸ் மேக்னட்டாவே மாத்திருச்சுப்பா...

நம்ம நண்பர்கள்ள யாராவது நம்மளைவிட கொஞ்சம் குள்ளமா இருந்துட்டா போதும்... நம்ம வாய் சும்மா இருக்குமா குள்ளமா இருக்க நண்பனை கலாய்ச்சே காண்டேத்திருவோம்... ஆனா லண்டனைச் சேர்ந்த Sultan Kosen அப்படி கிடையாதுங்க... எட்டு அடி உயரம் உள்ள Sultan Kosenக்கு வெறும் ஒன்பதே இன்ச் இருக்ககூடிய Chandra Bahadur Dangi தான் பெஸ்ட் ஃப்ரெண்டாம்... உருவத்துல வேணும்ன்னா நாங்க ரெண்டுபேரும் வித்தியாசமா இருக்கலாம்... ஆனா மனசலவுல நாங்க ஒன்னுதான் நம்மளை பீல் பண்ண வச்சுட்டாரு இந்த மனுஷன்...

இவ்வளவு நேரம் உயிர் நண்பர்களை பத்தி கத கதயா பேசி என்னோடா வாயே வலிச்சிருச்சு...so... நான் சுத்திவளச்சு பேச விரும்பல straighta pointக்கே வரேன்... அதாவது வர்ர ஜூன் 8ஆம் தேதி National best friends day அன்னைக்கு நீங்க என்ன பண்ணனும்னா... ஒரு காலத்துல உயிர் நண்பர்களா இருந்திருப்பீங்க... விட்டுட்டுபோய் கேன்டீன்ல தனியா பப்ஸ் சாப்பிட்ட ஒரே காரணத்துக்காக சில்றத்தனமா சண்ட போட்டு பிரிஞ்சுருப்பீங்க...

அதனால போனது போச்சு... ஆனது ஆச்சுனு... உங்ககிட்ட இருக்க ஈகோவையெல்லாம் தலைய சுத்தி தூக்கிபோட்டுட்டு உங்க உயிர் நண்பர்கள்கிட்டபோய் மனசு விட்டு பேசுங்க... நீங்க அவங்களை எவ்வளோ மிஸ் பண்ணிங்கன்னு சொல்லி...விட்றா மச்சான் பாத்துக்கலாம்னு நாளு வார்த்தை ஆதரவா பேசுங்க... முடிஞ்ச வர்ர எட்டாம் தேதி உங்க ஃப்ரெண்டுக்கு பிடிச்சதையெல்லாம் வாங்கி கொடுத்து அன்னைக்கு மரக்காம உங்க ஃப்ரெண்டு கூட ஒரு செல்பி எடுத்து HAPPY best friends DAY மச்சினு விஷ் பண்ணிருங்க... நண்பேண்டா....


Next Story

மேலும் செய்திகள்