ஜூலை 7 சாக்லேட் டே... கொண்டாலாம் வாங்க... சாக்லேட் டே உருவான வரலாறு!

x

அட டே ல இன்னைக்கு நாம பாக்க போற டே... என்னனு பாத்தோம்னா... நம்ம கண்ணுக்கும், நாக்குக்கும் விருந்து வைக்குற ஒரு இனிப்பான டேய் னு சொல்லலாம்...

எப்பா... எல்லா நாளும் இனிப்பான நாள் தான... அது என்ன இதுக்கு மட்டும் இனிப்பு , புளிப்புனு ஓவர் வர்ணிப்பா இருக்கேனு பாக்குறீங்களா.... ஆமாங்க அந்த இனிப்பான டேஸ்ட்ட குடுத்து நம்மள குஷிப்படுத்துற சாக்லேட்கு ஒரு தினம் எடுத்து கொண்டாடலனா எப்டி... அதுனால வர வியாழக்கிழமை... அதாவது 7 ஆம் தேதி... உலக மக்கள்லாம் ஒன்னு சேந்து சக்லேட் தினம் கொண்டாடுறாங்களாம்... அதுனால நாமளும் இந்த அற்புதமான டேய எப்டி கொண்டாடுறதுனும்.... சாக்லேட் பத்தின பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....

சாக்லேட் டேய பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அந்த சாக்லேட்டோட std... அதாவது வரலாரு என்னனு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்.

சாக்லேட்.... அதாவது இதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்... அதாவது பஞ்சு மிட்டாயும்... ஜவ்வு மிட்டாயும் இந்தியாவிற்க்குள் வராத காலம்.... பனியாரமும்.... முறுக்கும் மோதிக்கொண்ட காலம்... அச்சோ சாரிங்க டக்குனு கமல் மாதிரி பேசிட்டேன்....

சாக்லேட்டை மாயன் இன மக்கள் காலத்திலயே கண்டு பிடிச்சுட்டாங்களாம்… என்னதான்… மாயன் காலத்திலேயே சாக்லேட் கண்டு பிடிச்சுடாங்கனு சில வரலாற்று தகவல் சொன்னாலும், 1550 ஆம் ஆண்டு ஜூலை 7 தேதில தான் ஐரோப்பியர்கள் உலக மக்களுக்கு சாக்லேட்டை அறிமுகப்படுத்தினதா சில ஆய்வு தகவல்கள் சொல்லுது... அதனால தான் அந்த தேதியிலயே சாக்லேட் தினத்தை கொண்டாட தொடங்கிட்டாங்களாம்..

கோக்கோ விதையில இருந்து உருவாகுற சாக்லேட்டை… ஆரம்ப காலத்துல கூழ் மாதிரி ஆக்கி, அதை கப்ல ஊத்தி மடக்கு மடக்குனு குடிச்சாங்களாம்... முக்கியமா அந்தக் காலத்து ராஜாக்களின் விருந்து பட்டியல்ல முக்கிய அங்கமாவும் இருந்துருக்கு இந்த சாக்லேட்... அட இதுமட்டுமில்லங்க... பழங்காலத்துல நாணயங்களுக்கு பதிலா.... பன்டமாற்று முறைக்கு... கோக்கோ விதைகள் அதிகம் யூஸ் பன்னதா சொல்றாங்க. கிட்ட தட்ட தங்கக்காசுக்கு நிகரானதா இதோட விலைய மதிப்பிட்டுருக்காங்க…

சாக்லேட்டோட விதைகள் முகர்ந்து பாக்க ரொம்ப வாசனையா இருக்கும்... ஆனா டேஸ்ட் பன்னி பாத்திங்க அவ்வளவு தான் சாக்லேட்டை வெறுத்துருவீங்க… ஏனா அந்த அளவுக்கு கசக்குமாம்… வெரும் வாயால சாப்பிட முடியாதுங்குறதுனால தான்… தேன், பால், பழம் இதையெல்லாம் சேர்த்து பிசைஞ்சு சாக்லேட்டை சாப்பிட ஆரம்பிச்சாங்க…. அது தான் இன்னைக்கு நாம சாப்பிட்டுட்டு இருக்க சாக்லேட்டோட முதல் வடிவம்….

சாக்லேட்டுக்கு நம்ம மூடை(mood) மாத்துற சக்தி இருக்கு. சோகமா இருக்குறவங்க ஹாப்பியா ஃபீல் பண்ண, சாக்லேட்டை சாப்பிடலாம்னு சொல்றாங்க சில ஆராய்ச்சியாளர்கள். அதனால தான் மாயன்கள் காலத்துல இதை கடவுள் மக்களுக்கு கொடுத்த அற்புத பரிசாவே பார்த்திருக்காங்க.

சாக்லேட் சாப்பிட்டா இதயத்துக்கு … முடிக்கு …. மூளைக்கு நல்லதுங்குறது ஏற்கனவே தெரிஞ்ச பழைய விசயத்தை பேசாம கொஞ்சம் சுவாரஸ்யமான விசயங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க…

உலக மக்கள்ல அதிகம் சாக்லேட்டை விரும்பி சாப்பிட்றது ஸ்விட்சர்லாந்து நட்டு மக்கள் தானாம்… அவங்களோட உணவு வழக்கத்துல சாப்பாடு இருக்கோ இல்லையோ சாக்லேட் கட்டாயம் இருக்கனும் போல…

பொதுவா நாமலாம் சாக்லேட் வாங்கி சாப்டனும்னு ஆசை பட்டோம்னா அதிகப்பட்சம் எவ்ளோ குடுத்து வாங்கி சாப்பிடுவோம்… குறைஞ்சது 5 ரூபா இல்லனா 20 ரூபா… ம்ம்ம் சரி கேர்ள் பிரண்டுக்கு சாக்லேட் வாங்கி தரும்போது மட்டும் 200 ரூபாய் சாக்லேட்… அவ்ளோ தாங்க ஒரு சாக்லேட் வாங்க, நமக்கு இருக்க திரானி , சக்தியெல்லாம்… ஆனா நியூயார்க்கை சேந்த ஒரு நிறுவனம், 1 கிலோ சக்லேட்டை நாலு லட்சத்து விற்பனை பன்றாங்கப்பா… இந்த சாக்லேட்டோட பேரு Frrrozen Haute Chocolate ஆம் …. ஏன்பா 4 லட்சத்துக்கு விக்குறீங்களே இந்த சாக்லேட்ல தங்கத்துலயா செஞ்சிருக்கீங்கனு சும்மா கின்டல்க்கு கேட்டா ஆமானு சொல்றாங்க இந்த சாக்லேட்டை தயார் பன்னவங்க… ஆப்ரிக்காவுல கிடைக்க கூடிய அறிய வகை கோக்கோ, தென் அமெரிக்காவுல கிடைக்க கூடிய தேன், 23 கேரட் சுத்தமான சப்பிட கூடிய தங்கம்…. இதெல்லாம் சேத்து தான் இந்த சக்லேட்ட ரெடி பன்னியிருக்காங்கலாம்… பாருங்க சாபிட்ரது கூட தங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்றாங்க… எனக்கு இதை பாக்கும் போது "அட தங்க பஸ்பம் தின்னவனும் மன்னுகுள்ள , கம்மங்களி தின்னவனும் மன்னுகுள்ள அந்த பாட்டு தான் நியாபகம் வருது

சரி இந்த சாக்லேட் 4 லட்சம் தானேனு பாத்தா இங்க ஒரு சாக்லேட்ட15 லட்சத்துக்கு விக்குறாங்க…. எது.. 15 லட்சமா? இதுல என்னாப்பா வைரத்த கலந்துடீங்களானு கேட்டா… அதுக்கும் ஆமாங்குறாங்க… ஏம்பா வைரத்தலாம் சாப்பிட கூடாதுப்பா… சாப்டவும் முடியாதுனு நம்ம ஒரு கேள்வி கேட்டா… நாமலே அசந்து போற மாதிரி ஒரு பதிலை குடுக்குறாங்க இவங்க…

அதாவது இதோட கான்ஸப்ட் என்னனா... இந்த சாக்லேட் பாக்ஸ்ல ஒரு 10 சாக்லேட் துண்டு இருக்குமாம்… அதுக்கு நடுவுல காஸ்ட்லியான ஒரு வைர மோதிரமும்…. சாக்லேட்டை சுத்தி ஒரு வைர நெக்லசும் இருக்குமாம்… அதனால தான் இந்த சாக்லேட்டை இந்த விலைக்கு விக்குறாங்களாம்…. அதுக்கு நீ நகை கடை வச்சுட்டு போலாமே… ஏன்பா சாக்லேட் குள்ள இதை வச்சு வியாபாரம் பன்றனு கேட்டா… உங்க மனைவி உங்க கிட்ட வைர நெக்லஸ் கேட்டா வாங்கி தருவீங்களா… கட்டாயம் வாங்கி தர மாட்டீங்க…. அதுவே Le Chocolate Box வாங்கி தாங்கனு கேட்டா… அட கழுதை சாக்லேட் தானே நாளைக்கே வாங்கி தரேன்னு சத்தியம் பன்னிடுவீங்களே அதனால தான் இப்டி ஒரு வியாபாரம் பன்றோம்னு சொல்றாங்க…. ம்ம்ம் நம்ம ஊரு கணவன் மார்கள்லாம் கொஞ்சம் உசாரா இருந்துக்கோங்கப்பா….

"15 லட்சதுக்கு சாக்லேட் விக்குறாங்களா சாக்லேட் …" ஐயா நான் பக்கத்துல இருக்க அண்ணாச்சி கடைல 1 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி சாந்தோசமா சாப்டுக்கிறேன்… நீங்க வேற யார் தலைலயாச்சும் மொளகா அரைங்க…

நம்ம தமிழர்கள் அரிசியை வெறும் சோறா மட்டும் பார்க்காம இட்லி, தோசை , முறுக்கு , கொழுக்கட்டைனு வகை வகையா செய்யிற மாதிரி, கோக்கோ விதைல வந்த சாக்க்லேட்டை கட்டிட வடிவத்துல இருக்குற காம்பவுன்ட் சாக்லேட், தூள் செய்த பவுடர் சாக்லேட், ஐஸ் க்ரீம் சாக்லேட், முட்டை வடிவிலான சாக்லேட் , ஃபவுன்டெய்ன் சாக்லேட், பெல்ஜியம் சாக்லேட் , கப் கேக் சாக்லேட், ஹாட் சாக்லேட், செமி ஸ்வீட் சாக்லேட், டார்க் சாக்லேட், ஸ்வீட் ஜெர்மன் சாக்லேட்… இப்படி பல வகையா தயார் பண்ணி ஒரு வெட்டு வெட்டுறாங்க உலக மக்கள்.

பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட சாக்லேட்...

பொதுவா நாமக்கு தெரிஞ்ச சாக்லேட்லாம்… இந்தா இம்புட்டு நம்ம கை சைஸ்க்கு தான் இருக்கும்… ஆனா Armenia நாட்டை சேந்த Grand Candy அப்டிங்குற சாக்லேட் நிறுவனம் 4410 கிலோல ஒரு பிரம்மான்ட சாக்லேட்டை தயார் செஞ்சு… உலகின் மிகப்பெரிய சாக்லேட்னு கின்னஸ் ரெக்கார்டும் பன்னிருக்காங்க பாருங்க…

இப்போலாம் சொந்த காரங்க வீட்டுல விசேசம் வச்சாங்கனா கண்டிப்பா சாக்லேட் பவுன்டென்லாம் வைப்பாங்க… அது பாக்க சின்னதா 2 அடி சைஸ்ஸா அழகா இருக்கும்…. ஆனா அதையே 14 அடி உயரத்துல பாத்துருகீங்களா… ஐ எங்க கிட்ட இருக்கேனு அப்டினு சீன் போடுறாங்க லாஸ் வேகாஸ் நகரத்துல இருக்க Bellagio Hotel நிறுவனம்….

சாதரனமா சாக்லேட் பவுன்டன்ல ஒரே பிளேவர் சாக்லேட் தான் பொங்கி ஊத்திட்டு இருக்கும்… பட் இந்த 14 அடி சாக்லேட் பவுன்டேசன்ல பிளாக் , மில்க் , காஃபி , வொயிட்னு நாலு வகை பிளேவர் சாக்லேட்கள் 24 மனி நேரமும் அருவி மாதிரி ஊத்திட்டே இருக்குமாம்…. அப்புறம் என்ன அள்ளி அள்ளி பருக வேண்டியது தானே…

சாக்லேட்ல சிலைகள் செய்றத நாம பாத்துருப்போம்… ஆனா ட்ரெயின் செஞ்சி பாத்திருக்கீங்களா? 111 அடி நீளத்துல ஒரு சாக்லேட் ட்ரெயின உருவாக்கி கின்னஸ் ரெக்கார்ட் பன்னிருக்காங்க… பெல்ஜியம் மக்கள்….

நம்மளாம் சாக்லேட் வாங்குனா என்ன பன்னனுவோம்…. சாக்லேட்ட சாப்ட்டு கவர தூக்கி போட்டு போயிட்டே இருப்போம்…. ஒரு வேளை அதிசியமா கேர்ள் பிரன்ட் வாங்கி குடுத்தா ரெண்டு நாள் பத்திரமா வச்சிட்டு அப்புறம் தூக்கி போட்டுடுவோம் அவ்வளவு தான்… ஆனா அமெரிக்காவ சேர்ந்த Bob Browns அப்டிங்குறவரு உலகின் மிக பிரபலமாக இருக்க கூடிய 1700 சாக்லேட்களை சேத்து வச்சிட்டு வராராம்… அடேங்கப்பா வெறித்தனமான சாக்லேட் வெறியரா இருப்பாரு போலயே….

பெரும்பாலும் மக்கள் எந்த மாதிரியான சாக்லேட்ட அதிகம் விரும்புறாங்கனு பாத்தா…. Ferrero Rocher , Guylian , Toblerone னு இந்த மொரு மொரு மொருனு கடிச்சு சாபிட்ற சாக்லேட்ட தான் ரொம்ப விரும்புறங்களாம்…

நம்ம கோவில் திருவிழாவுல பொங்கல் புளியோதரைலாம் ஃப்ரீயா தர மாதிரி… அமெரிக்க , லண்டன், இங்கிலாந்து மாதிரியான மேற்கத்திய நாடுகள்ல சாக்லேட்டுகாக ஒரு திருவிழாவே கொண்டாடுறாங்களாம்… அன்னைக்கு மட்டும் நீங்க சாக்லேட்டை காசு குடுத்து வாங்கனும்னுலாம் இல்லையாம் பிடிச்ச சாக்லேட்டை… ஃபிரீயா வாங்கிலாமாம்… இவ்ளோ ஏன் அன்னைக்கு ஒரு சிலர் தங்களோட கஸ்ட்யூம கூட சாக்லேட்டாலயே செஞ்சு போட்டுப்பாங்களாம்…

நான் யாருக்கும் அடிமை இல்லைனு வீராப்பா சொல்றவங்க கூட சாக்லேட் சுவைக்கு அடிமைதான். அப்டி பட்ட இந்த சாக்லேட் தினத்தை எப்படி கொண்டாடுறதுனு பாக்கலாம் வாங்க…

இந்த நாள்ல நம்ம மூஞ்சில சோகமே இருக்க கூடதாம்... சிரிச்ச முகமா அழகா இருக்கனுமாம்… முக்கியமா சொத்த பல்லு வந்துடுமோ, குண்டாயிடுவோமோ... அப்படியெல்லா யோசிக்காம எக்கச்சக்கமா சாக்லேட்டை விரும்பி சாப்பிடணுமாம்….

காதலர்களின் கடைசி ஆயுதம் சாக்லேட்...

கோவமா இருக்குற காதலியை சமாதானப்படுத்த முடியலனா கடைசி பிரம்மாஸ்திரமா சாக்லேட்டைத்தான் பயன் படுத்துறாங்களாம். அதனாலயே காதலர் தினம் அன்னைக்கு முக்கிய பங்கு வகிக்குது சாக்லேட்! அதுக்காக காதலர் தினம் வரைக்கும் ஒரு சாக்லேட்காக வெயிட் பன்ன முடியுமா… எப்போலாம் காதலிய பாக்க போறீங்களோ அப்போலாம் சாக்லேட் வாங்கிட்டு போகனுமாம்…

ஐ…யே… இது என்ன 50 ரூவா சாக்லேட்டு ஒருத்தருக்கு கூட பத்தமாட்டேங்குது… எங்க காலத்துல… ரெண்டு ரூவா வச்சுகிட்டு எவ்ளோ சாக்லேட்ட நானும் என்னோட பிரன்ட்ஸ்லாம் வாங்கி சாப்பிடுவோம் தெரியுமா… அதுலாமொரு காலம் அப்டினு சொல்லுற 90ஸ் ,80ஸ் கிட்ஸா இருந்தீங்கனா உடனே நீங்க சாப்பிட்ட சாக்லேட் நினைவுகளை… உங்களோட மட்டும் வச்சுக்காம இன்ஸ்டா பேஸ்புக் மாதிரியான சமூக வலைதளத்துல சேர் செஞ்சு சாக்லேட் டேய கொண்டாடனுமாம்.

பொங்கலுக்கு பொங்கல் சாப்டுறோம். கிறிஸ்மஸ்க்கு கேக் சாப்பிடுறோம் , ரம்ஜான்கு பிரியானி சாப்பிட்றோம் அது மாதிரி, கண்டிப்பா சாக்லேட் டேய்க்கு சாக்லேட் சாப்டே ஆகணும்னு தோணுதுல்ல ? அதுனால வர 7 ஆம் தேதி என்ன பன்றோம் ஒரு 1 ரூபாயோ 5 ரூபாயோ ஏதோ ஒரு சில்றை அமவுன்ட எடுத்து நமக்கு பிடிச்ச சாக்லேட்ட உடனே வாங்கி சாப்பிட்றோம்…. சாக்லேட் டேய செலப்ரேட் பண்றோம்


Next Story

மேலும் செய்திகள்