ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய நம்பர் ஒன் வீரர் கார்ல்சன்
ஜூலியஸ் கோப்பை சர்வதேச செஸ் தொடரில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி உடன் கார்ல்சன் மோதினார். ஆன்லைன் மூலம் 2 சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த அர்ஜுன் எரிகேசி 2ம் இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாயும், 2ம் இடம் பிடித்த எரிகேசிக்கு 12 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.
Next Story