வேறு ஒருவர் வழக்கில் வழங்கிய தீர்ப்பு.. ஜெயலலிதா வழக்கில் எதிரொலிப்பு - வாரிசுகளுக்கு வந்த சிக்கல்?

x

வழக்கு ஒன்றில், கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கில் அபராதம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டிலே கவுடா என்பவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்திய வழக்கில் அவருக்கு 29 ஆயிரத்து 204 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார்.

அவரது வாரிசுகள் யாரும் வழக்கை மேற்கொண்டு நடத்த முன் வராததால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு சொந்தமான சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை உரிமைகோருபவர்களிடமிருந்தோ அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த சூழலில், இவ்வாறு வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கொடி ரூபாய் அபராத தொகையை, அவரது வாரிசுகளிடமிருந்து பெற முடியும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த தீர்ப்பு அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்