"அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சியாகமாறி விட்டது" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
- ஊழல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு பெயர் போன கட்சி காங்கிரஸ் என பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
- கடலோர கர்நாடக மாவட்டங்களில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
- .உடுப்பி பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, இந்தியாவின் 2-வது மிக பெரிய பொருளாதார மாநிலத்தில் ஒன்றாக கர்நாடகா மாற போகிறது என்றார்.
- இன்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக உள்ளதாக நட்டா குறை கூறினார்.
- ஆனால் பாஜக அப்படிப்பட்ட கட்சி அல்ல என்றும், மக்கள் நலன் சார்ந்து சிந்தனை செய்யும் கட்சி என்றார்.
- உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக வலிமை உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் செய்யப்பட்டதே உதாரணம் என்றார்.
Next Story