பள்ளத்தில் விழுந்து பத்திரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம் - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்
பள்ளத்தில் விழுந்து பத்திரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம் - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாக அரசு பொய் பரப்புரை செய்வதாக கூறியுள்ள அவர், அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அலட்சியத்தோடு செயல்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஈபிஎஸ், இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story