சுகாதார நிலைய ஊழியரிடம் நகை பறிப்பு - நூதன முறையில் நகையை மீட்ட போலீசார்

x

சென்னை எழும்பூரில், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை, நூதன முறையில் போலீசார் மீட்ட சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் உஷா என்பவர், பணியை முடித்துவிட்டு அங்குள்ள ஓய்வறையில் படுத்து உறங்கியுள்ளார். காலையில் கண்விழித்து பார்த்தபோது, கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், தங்க நகையை திருடியது மருத்துவமனை ஊழியர்கள்தான் என போலீசார் உறுதி செய்தனர். அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதால், நூதன முறையில் நகையை மீட்க போலீசார் யுத்தியை கையாண்டனர். அதன் பேரில், மருத்துவமனையில் உள்ள 11 ஊழியர்களின் கண்களை கட்டி, ஒரு அறையை காண்பித்து, அதில் இருக்கும் பைகளில், திருடிய தங்க தாலியை போட்டு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படாது என போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் போலீசார் எதிர்பார்த்ததுபோல், திருடப்பட்ட தங்கச் சங்கிலி அந்த பையில் இருந்தது தெரியவந்தது. காவல்துறையினரின் இந்த செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்