ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..தமிழக அளவில் சென்னை மாணவர் விஸ்வஜித் முதலிடம்

x

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் சென்னை மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்...

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜேஇஇ போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு என 2 கட்டங்களாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதன்மை தேர்வின் ஒரு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான. 2வது கட்டமாக நடத்தப்பட்ட முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் நாடு தழுவிய அளவில் 43 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளனர். 24வது இடத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவர் விஸ்வஜித் இடம் பிடித்திருக்கிறார். தமிழக அளவிலும் இந்த மாணவரே முதலிடத்தில் உள்ளார். பிப்ரவரி மாதம் வெளியான முதன்மை தேர்விலும் இந்த மாணவரே முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடை நடைபெறக்கூடிய அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்பா்.


Next Story

மேலும் செய்திகள்