ஜெயலலிதா மரணம் - விசாரணைக்கு இத்தனை கோடி செலவா?
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 23 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை மட்டும் செயல்பாட்டில் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது
தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள் துப்பாக்கி சூடுகள் உயிரிழப்புகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் அலுவலர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் விபரங்கள் அதற்கு செலவிடப்பட்ட தொகை குறித்த தகவலை திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.