சுவாமி மலை கோயிலில் ஜப்பான் நடிகை சாமி தரிசனம் - தமிழில் பேசி அசத்தல்..!
சுவாமிமலையில் அமைந்துள்ள சுவாமிநாதன் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நடிகை உள்பட பலர் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நடிகை உள்பட பலர் சாமி தரிசனம் செய்தனர்.
ஜப்பானில் பயிரிடப்பட்ட முருகா என்னும் பெயர் கொண்ட அரிசியை, சுவாமி மலை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தனர்.
இந்தக் குழுவினரை, ஜப்பானில் 35 ஆண்டுகளாக தமிழ் பயிற்றுவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வழி நடத்தி வருகிறார்.
Next Story