உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ஜப்பான்

x

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் 'இ' பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின.

முதல் பாதியின் 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மொராட்டா கோல் அடித்தார்.

இதைத்தொடர்ந்து 2-வது பாதியில் 48 மற்றும் 51-வது நிமிடங்களில் ஜப்பான் வீரர் ரிட்சு டுவான், டனாகா ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர், இறுதியில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய ஜப்பான், 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்பெயின் தோல்வியடைந்தாலும் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், அந்த அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்