ஹாலிவுட்ல படம் இயக்கனுமா? - வாங்க பேசலாம் ராஜமவுலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு..!

x

ஹாலிவுட்டில் படம் இயக்குவதாக இருந்தால் நாம் இணைந்து பேசலாம் என இயக்குநர் ராஜமவுலியிடம் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடந்து முடிந்த CRITICS CHOICE AWARDS நிகழ்ச்சியில் அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் ராஜமவுலி கலந்துரையாடினர்.

அப்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இரண்டு முறை பார்த்ததாக கூறிய கேமரூன், படத்தின் திரைக்கதையும், காட்சிக்கு காட்சிக்கு கதை நகர்த்தப்பட்ட விதமும் சிறப்பாக இருந்ததாக ராஜமவுலியை பாராட்டினார்.

தங்களது பாராட்டு விருதைவிட மிகப்பெரியது என ராஜமவுலி நெகிழ்ந்தார்.

தொடர்ந்து இசையமைப்பாளர் கீரவாணியை வெகுவாக பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன், ஹாலிவுட்டில் படம் இயக்குவதாக இருந்தால் இருவரும் இணைந்து பேசலாம் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்