400 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டில் உயிர் நீத்த வீரர்...சிலை வடித்து...மாடு பிடி வீரர்கள் வழிபாடு...
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, 400 ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த வீரருக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
சொரிக்காம்பட்டி கிராமத்தில், வசித்து வந்த அழகுத்தேவர் என்பவர், கடந்த 400 வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிகட்டு நடந்தாலும் காளைகளை தேர்ந்தெடுத்து அடக்குவதில் வல்லவராக விளங்கியுள்ளார். இவர்,
தமது 26 ஆவது வயதில் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொண்டு ஐந்து மாடுகளை அடக்கியுள்ளார்.
பின்னர், 6 வது மாட்டை அடக்கும் போது, வயிற்றில் காளை மாட்டின் கொம்பு குத்தி குடல் வெளியே வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் வயிற்றில் துணியை கட்டி கொண்டு 6 வது மாட்டையும் அடக்கி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து காயமடைந்த அழகுதேவர் சிறிது நாட்களில் இறந்துவிட்டார். இவரது நினைவாக பின் வந்த வாரிசுதாரர்கள் சிலை எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கு செல்லும் போது மாடுகளையும் மாடு பிடி வீரர்களும் பாட்டன் கோவிலை வணங்கி விட்டு சென்றால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கையாகும்.