எஸ்ஐ-க்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

கும்பகோணம் அருகே புகார்தாரரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற எஸ்ஐ.,க்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கபிஸ்தலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த சண்முகம் என்பவரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. சாமிதுரை கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், எஸ்.ஐ. சாமிதுரைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த‌து. மேலும், 3ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால், 3 மாதம் மெய்காவல் தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்த‌து.


Next Story

மேலும் செய்திகள்