இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. சிக்கிய சிறை பாதுகாப்பு அதிகாரிகள்.. | Salem

x

சேலத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் சிறை பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மத்திய சிறையில் பாதுகாப்பு அதிகாரிகளாக பணி புரிந்து வருபவர்கள் அருண் மற்றும் சிவசங்கர். இவர்கள் இருவரும் பேருந்தில் செல்லும் போது, சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்ணிடம் இருந்து செல்போன் நம்பர் வாங்கிய இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் சிறை காவலர் குடியிருப்புக்கு பெண்ணை அழைத்து வந்ததாகவும், அங்கு ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்