"முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது"... ஓய்வுபெற்ற நீதிபதி பரபரப்பு பேச்சு
டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற மனித உரிமை நாள் விழாவில் பேசிய அவர், போபால் விஷவாயு பேரழிவு உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து என்று
தெரிவித்தார். போபால் விஷவாயு கழிவுகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இது விபத்தில் தப்பி பிழைத்தவர்களின், சுகாதார உரிமையை நேரடியாக உதாசீனப்படுத்துவதாக உள்ளது எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா கூறினார். சமூக, சடங்கு, மத வழக்கங்களால் உலக முழுவதும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுகிறது எனவும் இதற்கு முடிவு கட்ட வேண்டிய சட்டங்களை இயற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் அருண் மிஸ்ரா தெரிவித்தார்.
Next Story