"சில்லறை கேட்டது ஒரு குத்தமா..!" கஸ்டமர் செய்த பகீர் காரியம்.. அதிர்ந்த ஊழியர் - பரபரப்பு காட்சி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பைக் நிறுத்தியதற்கான கட்டணத்தை சில்லறையாக வழங்குமாறு கேட்ட ஊழியரை, ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டணம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர், பைக் ஸ்டேண்டில் தனது பைக்கை நிறுத்தி உள்ளார். இவரிடம் கட்டணத்தை சில்லறையாக வழங்குமாறு, பைக் ஸ்டேண்ட் ஊழியர் யுவராஜ் கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு யுவராஜை அருள் தாக்கி உள்ளார். தாக்குதல் நடத்தியவர் திமுக பிரமுகர் எனக் கூறப்பட்டு, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்