கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்- தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

x

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, கர்நாடகாவில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். திங்களன்று, பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், அன்று வரை மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக கொண்டு செல்லப்பட்ட மதுபானம், போதைப் பொருள்கள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச பொருள்கள் என 3751 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023 சட்டமன்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆணையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்