சூறைக்காற்றுடன் பெய்த பேய் மழையில் நின்றகொண்டிருந்த ஆட்டோ தானாக ஓடிய அதிசயம்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனமழை வெளுத்து வாங்கியது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று தானாகவே நகர்ந்து சென்றது.

சாலையில் வேறு எந்த வாகனமும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நன்னிலம், பணங்குடி, ஆண்டிபந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இடி, பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் கடைகள் முன்பு வைக்கப்பட்டு இருந்த போர்டுகள் தூக்கி வீசப்பட்டது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கனமழை பெய்தது. பார்த்திபனூர், கீழப்பெருங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




Next Story

மேலும் செய்திகள்