டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் IT ரெய்டு.. மாலைக்குள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு
ஈரோடு திண்டல் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள், 4வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டல் சக்திநகரில் டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் என்பவரது வீட்டில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 4வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் இந்தச் சோதனை நிறைவுபெறும் என தெரிகிறது. இதன்பின்னரே ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story