குளித்து கும்மாளம் போடும் சிறுவர்களுக்கு இது ஆபத்து என தெரியல..

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கலசப்பாக்கம், செங்கம், ஜவ்வாது மலை உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக செங்கம் பகுதியில் உள்ள குப்பனந்தம் அணை, கலசப்பாக்கம் மிருகண்டா அணை ஆகியவை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் செய்யாற்றில் கலப்பதால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

மேலும், ஆற்றின் நீரில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடி மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்