டிராக்டரில் பயணித்து பணிக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் ஐடி நிறுவன ஊழியர்கள் பலர் டிராக்டரில் தங்களது அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஏமலூர் பகுதியில் பெய்த கனமழையால், பல ஐடி நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விடுமுறை எடுக்க முடியாமல் பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட இவர்கள், 50 ரூபாய் கொடுத்து இந்த டிராக்டரில் பயணம் செய்கின்றனர்.
Next Story