8500 பேரை பணி நீக்கம் செய்ய போகும் IT நிறுவனம்

x

தொலைத் தொடர்பு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் உலகம் முழுவது, சுமார் 8 ஆயிரத்து 500 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சமீப காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது எரிக்சனும் இணைந்துள்ளது. 2023ம் ஆண்டின் முதல் பாதியில் முதல் பணிநீக்க நடவடிக்கையும், 2024ல் 2ம் கட்ட பணி நீக்க நடவடிக்கையும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவினங்களைக் குறைக்க ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எரிக்சன் நிறுவனம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இந்த வாரம் சுவீடனில் ஆயிரத்து 400 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்