இஸ்ரோவின் சி.இ.20 இ9 கிரியோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி..! | ISRO | Space

x

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற, சி.இ.20 இ9 கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை, வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் மூலம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்விற்கான பரிசோதனை பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சி.இ.20 இ9 என்ஜின் சோதனை, இஸ்ரோ மைய இயக்குநர் பத்ரி நாராயணமூர்த்தி, இணை இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் 650 வினாடிகள் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான ராக்கெட் 22 புள்ளி 2 டன் எடையை தாங்கி செல்லும். தற்போதைய பரிசோதனை மூலம், கூடுதலாக 500 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். சோதனையை காணொளி காட்சி வகையிலாக பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சோமநாத், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்