2022ம் ஆண்டின் இஸ்ரோவின் சாதனைகள் .....விண்வெளித்துறை ஆய்வில் அதிரடி பாய்ச்சல்

x

இந்த ஆண்டு விண்வெளி துறையில் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளது, இந்திய'. 2002 ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது எப்படி? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

புத்தாண்டு பிறந்த கையோடு, கடந்த ஜனவரி மாதம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜினின் பரிசோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் வைத்து இந்த பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை வெற்றியடைந்த தால் இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

பிப்ரவரி மாதம், நாசாவின் செயற்கைகோள்களுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை கண்டறிந்தது, சந்திராயன் 2. கடந்த ஜூலை 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 2 வின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றும் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்வெளிகள் வெடித்து சிதறும் சூரியனின் பிழம்புகளை சந்திராயன்-2 பதிவு செய்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழையும் ஆற்றல் மிகுந்த சூரிய துகள்கள் குறித்த ஆய்வு மற்றும் புரிதல் ஏற்படும்.

அதே பிப்ரவரி மாதம் புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக் கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட். பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் , 2022-ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் திட்டமாக அமைந்திருந்தது. இந்த ரேடார் செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு பயன்படும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் முதல்முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் மூலம் வரைபடமாக்கி அனுப்பி இருந்தது , சந்திராயன் 2.

சந்திரயான் -2 வின் இந்த புதிய கண்டுபிடிப்பு நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உதவும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

நவம்பர் மாதம், தான் வடிவமைத்த ஒசோன்சாட்-03 என்ற புவி கண்காணிப்புக்காண செயற்கைக்கோளையும் சேர்த்து எட்டு நானோ செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது , பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்.


Next Story

மேலும் செய்திகள்