நாசாவால் முடியாததை செய்து காட்டிய இஸ்ரோ..இந்தியாவின் மரியாதையை உயர செய்த மங்கள்யான்..!

x

பூமியில் இருந்து 12.5 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2013 நவம்பரில் மங்கள்யான் விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. மங்கள்யானை உருவாக்க 153 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ராக்கெட் உள்ளிட்ட மொத்த செலவுகள் 454 கோடி ரூபாயாக இருந்தது.

பூமியை சுற்றி வந்த மங்கள்யான் பின்னர் சூரியனை சுற்றத் தொடங்கியது. சூரியனை சுற்றி வந்த மங்கல்யானின் சுற்றுப்பாதையின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு,

ஒரு கட்டத்தில் அது செவ்வாயை நோக்கி செலுத்தப்பட்டது. இதற்கான ஆணைகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மங்கள்யானுக்கு ரேடியோ மூலம் அனுப்பப்பட்டது.

செவ்வாய் நோக்கி அதி வேகத்தில் சென்ற மங்கள்யான், 2014 செப்டம்பரில் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையை எட்டியது. அதன் பின், செவ்வாய் கிரகத்தை இன்று வரை வெற்றிகரமாக சுற்றி வருகிறது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதற்கு முன்பு உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது.

முதல் முயற்சியிலேயே செவ்வாயின் வெளிவட்டப் பாதையில் விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய முதல் உலக நாடு இந்தியா தான். மற்ற மூன்று நாடுகளும் பல முறை முயன்று, தோல்வியடைந்த பின், இதை சாதித்தன.

இன்று வரை மங்கள்யான் இஸ்ரோவிற்கு செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தின் வெளிவட்டப் பாதையில் மங்கள்யான் விணகலம் நிலை நிறுத்தப்பட்ட தினம், 2014 செப்டம்பர் 24.


Next Story

மேலும் செய்திகள்