"நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற பணம் இல்லையா?" - ஜெயக்குமார் பரபரப்பு கேள்வி

x

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களை, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பி வி ரமணா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அரசு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது போன்ற ஊராட்சி செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்