"சீமானை கைது செய்வதில் ஏதும் பிரச்சினை உள்ளதா ?" - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் கேள்வி

x

அருந்ததியர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்து விசாரணை செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தல் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் வகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதை கண்டித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீதான விசாரணையின் போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்ஆஜராகி விளக்கம் அளித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் சீமான் இதுவரை கைது செய்யப்படவில்லை என அப்போது வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து சீமானை கைது செய்வதில் ஏதும் பிரச்சினை உள்ளதா ? என ஆணைய துணைத்தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்